ஆண், பெண் பேதமின்றி குழந்தைகளின் படிப்பில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு
ஆண், பெண் பேதமின்றி குழந்தைகளின் படிப்பில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அசூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ‘எதிர்கால சமுதாயத்தின் ஆணி வேராக திகழும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஆண், பெண் பேதமின்றி குழந்தைகளின் பாதுகாப்பிலும், படிப்பிலும் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். 21 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் பிறக்கும். மேலும் தமிழக அரசின் மூலம் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும், பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‘ என்றார்.
இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 6 ஆயிரத்து 260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் சாந்தா வழங்கினார்.
விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அதிகாரிகளால் விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சேதுராமன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story