கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சிறு விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் சிறு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். நகராட்சி வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் வெங்கடாசலம், ஜோதி, ஷேக்அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். வண்டிக்காரத்தெருவில் ஏற்கனவே இருந்ததுபோல் தரைக்கடை வியாபாரிகளுக்கு கயிறு பதித்து தர வேண்டும். நகராட்சியின் வெண்டிங் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், ஜாக் அமைப்பின் செயலாளர் ராயர், கார்-வேன்-ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story