மாவட்ட செய்திகள்

புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் + "||" + Wife's fire in family dispute; Husband injured who tried to save her

புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்

புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்
புழல் அருகே குடும்பத் தகராறில் மனைவி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் வள்ளுவன் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா(வயது 36). வெல்டர். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி(30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இளையராஜாவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன்–மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை வழக்கம்போல் இளையராஜா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சாமுண்டீஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா, மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கணவன்–மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும்; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்
புதுவையில் வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
2. தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி
தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்துவிழுந்து ஒப்பந்த ஊழியர் பலியானார். மற்றொரு ஊழியர் படுகாயம் அடைந்தார்.
3. ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை
பெரிய காஞ்சீபுரத்தில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டார்.
5. மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி
போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியான வாலிபரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.