காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் தாசில்தார் காஞ்சனமாலா ஸ்ரீபெரும்புதூருக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன் வாலாஜாபாத்துக்கும் வாலாஜாபாத் தாசில்தார் கிரிராணி கோயம்பேடு வெளிவட்டப்பாதை நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், அந்த பதவியில் இருந்த சங்கர் தாம்பரம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் தாசில்தார் சாந்தி, உத்திரமேரூர் தாசில்தாராகவும், உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி இருங்காட்டுக்கோட்டை விரிவாக்கத்திட்ட நிலம் எடுப்பு தாசில்தாராகவும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருமழிசை டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் செய்யூர் தாசில்தாராகவும், செய்யூர் தாசில்தார் ரமா, மறைமலை நகர் திட்ட நிலம் எடுப்பு தனிதாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு நகர நிலவரிதிட்ட தனி தாசில்தார் தங்கராஜ் காஞ்சீபுரம் தாசில்தாராகவும், மெட்ரோ ரெயில் திட்ட நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஓம் பிரகாஷ் பல்லாவரம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லாவரம் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தார் செந்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தனி தாசில்தாராகவும், செங்கல்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மணிவண்ணன் செங்கல்பட்டு நகர நிலவரித்திட்ட தாசில் தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட அதிகாரிகள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும். இந்த இடமாறுதல் ஆணையின் மீது விடுப்போ, மறுப்போ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணியிடத்தில் சேர்ந்த நாளையும் துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story