மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி + "||" + in ParamathiVellore area Tapioca price hike Farmers are happy

பரமத்தி வேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.750 வரை உயர்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பரமத்திவேலூர், 

பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.750 வரை உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 750 வரை விற்பனையாகி வருகிறது. மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்வடைந்து உள்ளதால் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூர்-முதுமலை எல்லையில், மரவள்ளி கிழங்கு, வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமத்தில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக்கிழங்கு, வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.