முட்டத்தில் வள்ளங்கள் தீயில் எரிந்து நாசம்


முட்டத்தில் வள்ளங்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

தொழில் முடிந்து மீனவர்கள் வள்ளத்தை அங்கு கரையேற்றி வைத்திருந்தனர். காலை 11 மணிஅளவில் 5 வள்ளங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தில் தனியார் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மேற்கு பகுதியில் பைபர் வள்ளம் மூலம் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் தொழில் முடிந்து வள்ளங்களை துறைமுகத்தின் மேற்கு பகுதியில் கரையேற்றி வைப்பது வழக்கம்.நேற்று காலை வழக்கம் போல் தொழில் முடிந்து மீனவர்கள் வள்ளத்தை அங்கு கரையேற்றி வைத்திருந்தனர். காலை 11 மணிஅளவில் 5 வள்ளங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு துறைமுகப்பணியில் ஈடுப்பட்டிருந்த பொக்லைன் டிரைவர்கள் விரைந்து சென்று மணல்களை எடுத்து போட்டு தீயை அணைத்தனர். இருந்தாலும் வள்ளங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாரோ சிகரெட் தீயை அணைக்காமல் காய்ந்த புற்களில் போட்டுள்ளனர். இந்த தீ பரவி வள்ளங்களில் பிடித்ததாக கூறப்படுகிறது.

Next Story