பள்ளிபாளையம் அருகே விவசாய நிலத்தில் மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு; மாற்றுத்திறனாளி முதியவர் கைது
பள்ளிபாளையம் அருகே, விவசாய நிலத்தில் மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த மாற்றுத்திறனாளி முதியவர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் விவசாய விளை நிலங்களுக்கு மத்தியில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த நிலையில் நேற்று மலப்பாளையம் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் விவசாய நிலங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் மின்கம்பங்கள் நடும் பணி நடந்தது.
அப்போது வேலப்பகவுண்டர் (வயது 70) என்ற வாய் பேய இயலாத மாற்றுத்திறனாளியின் நிலத்தில் பணிகள் நடந்தபோது, அவர் மின்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொளசி போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story