மாவட்ட செய்திகள்

செஞ்சி அருகே, கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Near Ginger, The young men murdered corpse in a well? Police investigation

செஞ்சி அருகே, கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

செஞ்சி அருகே, கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
செஞ்சி அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி,

செஞ்சி அருகே மண்டகப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் சென்னை கொளத்தூரை சேர்ந்த சங்கர் மகன் தினேஷ்(வயது 25) என்பதும், செஞ்சியை அடுத்த முட்டத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே தினேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை