மணிமங்கலம், மாமல்லபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர செயல்முறை விளக்க பயிற்சி


மணிமங்கலம், மாமல்லபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர செயல்முறை விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 15 Feb 2019 3:30 AM IST (Updated: 15 Feb 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

மணிமங்கலம், மாமல்லபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிமங்கலம், மலைப்பட்டு, கிராமங்களில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விளக்க பயிற்சி படப்பை மண்டல துணை தாசில்தார் பூபாலன் தலைமையில் நடைபெற்றது. மணிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விளக்க பயிற்சியில் மாவட்ட துணை கலெக்டர் அசோகன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வாக்களிப்பது எப்படி ? தாம் அளித்த வாக்கினை உறுதி செய்வது குறித்தும் விளக்கி கூறினார். ஆய்வின் போது கிராம நிர்வாக அதிகாரி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்த உள்நாட்டு பயணிகளிடம் வருவாய்த்துறை சார்பில் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நாம் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்ற செயல் முறை விளக்க பயிற்சி அர்ச்சுனன் தபசு வளாகத்தில் அளிக்கப்பட்டது.

இதில் சுற்றுலா பயணிகள் பலர் செயல் முறை பயிற்சி நடந்த இடத்திற்கு வந்து ஆர்வமுடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்து நாம் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று தெரிந்து கொண்டனர்.

Next Story