நாகையில் சாலை பணியாளர்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
நாகையில் சாலை பணியாளர்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவி, வட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன், சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் நாகை வட்ட தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாதவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், தர ஊதியத்தை விடுவிக்க வேண்டும்.
நிரந்தர ஊதிய தொகுப்பில் மாத ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தில் உயிர்நீத்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story