மாவட்ட செய்திகள்

பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு + "||" + Speech, prize winners in the tournament winners

பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாமரைக்குளம்,

அரியலூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 4, 5-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஓவியம்,பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வராணி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி பார்வையிட்டார். இப்போட்டிகளில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்ச்சி பெற்ற 115 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு பிரிவில் இருந்து 3 மாணவ- மாணவிகள் தேர்ச்சி செய்யப்பட்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவசங்கரன், தேன்மொழி, அமராவதி, மாரிமுத்து, ஜெயவேணி, இசையமுது, செல்வமணி, செந்தமிழ்செல்வி, அங்கையற்கண்ணி, மகேஸ்வரிபாய் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை