கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரிக்கை
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீடு தொகை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியதால், விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். இதையடுத்து மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களுக்கு எக்டேருக்கு ரூ.7,410-ம், கிணற்றுப் பாசனத்தில் பயிரிட்டவர்களுக்கு எக்டேருக்கு ரூ.13,500-ம் பயிர் காப்பீடு தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உடனே வழங்க வேண்டும். எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் உள்ள 16 கிராம மக்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்படாமல் விடுபட்ட மக்காச்சோள பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காலதாமதமின்றி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். விவசாய கடன், கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை, குருநாதன், மாவட்ட செயலாளர்கள் ஞான பிரகாசம், ரவிச்சந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன், மாநில துணை தலைவர் நம்பிராஜன், மாநில துணை செயலாளர் கனகராஜ்,
தாலுகா தலைவர்கள் பிரதீப், தங்கராஜ், கோபாலகிருஷ்ணன், செயலாளர்கள் ராஜேந்திரன், புஷ்பராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் செல்வராஜ், துணை தலைவர் சாமியா, துணை செயலாளர் சென்னப்பன், மகளிர் அணி கஸ்தூரி, அவை தலைவர் வெங்கடசாமி, பிரதிநிதி ராமச்சந்திரன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story