திருச்செந்தூர் கோட்டத்தில் மின்கட்டணம் செலுத்தும் வசதி 2 நாட்கள் நிறுத்தம்
திருச்செந்தூர் கோட்டத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (சனிக்கிழமை) முதல் 2நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் வசதி நிறுத்தி வைக்கப்படும்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோட்டத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (சனிக்கிழமை) முதல் 2நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் வசதி நிறுத்தி வைக்கப்படும் என மின்வினியோக செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கணினி தொழில்நுட்ப...
மின்பகிர்மான கழக கணினி தொழில்நுட்ப மேம்படுத்தும் பணிகள் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. எனவே அன்றைய தினங்களில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் வசதி நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் நாளை மின்வாரிய அலுவலக வேலைநாளாக இருப்பினும், மின்கட்டண வசூல் மையம் செயல்படாது.
18-ந் தேதி முதல்...
18-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் இருந்து வழக்கம்போல் இணையதளம் வாயிலாகவோ அல்லது பிரிவு அலுவலக வசூல் மையங்களிலோ பொதுமக்கள் மின்கட்டணங்களை செலுத்தலாம். நாளை, நாளை மறுநாள்ஆகிய நாட்களில் மின் கட்டணம் செலுத்த கடைசி நாளாக உடையவர்கள் 18-ந்தேதி மட்டும் தாமத செலுத்துதல் கட்டணம் இன்றி, மின் கட்டணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story