தமிழகத்தில் நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி


தமிழகத்தில் நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் நீர் பாசனத்திற்கு என தனி அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் நீர் பாசனம் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ளது. எனவே தமிழகத்தில் நீர் பாசனத்துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். மேலும் ஜவ்வரிசி உற்பத்தி தொழிலை பாதுகாக்கும் விதத்தில் மரவள்ளி விவசாயிகள் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

நிலத்தடி நீரை எடுக்க தமிழகத்தில் தடை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனமாகும். அதை தடுக்க தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை விதிக்க வேண்டும்.

2019 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பு, தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இல்லை என்றால் அந்த தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். அது அரசியல் கட்சியினருக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் தன்மானத்திற்கும், சுய மரியாதைக்கும் விடுக்கும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story