நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடவடிக்கை


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2019 3:15 AM IST (Updated: 15 Feb 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 115 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.அதன்படி பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால், புளியரை முத்தையா, வீரவநல்லூர் அன்புராஜ், கல்லிடைக்குறிச்சி காளிதாஸ், சங்கரன்கோவில் டவுன் பரமசிவன், பாப்பாக்குடி ஜான்சன் கென்னடி, ஆலங்குளம் பழனி, குருவிகுளம் மாரியப்பன், சேரன்மாதேவி செய்யது நிஷார் அகமது, விக்கிரமசிங்கபுரம் மாரியப்பன், முன்னீர்பள்ளம் மாரியப்பன், மாஞ்சோலை அய்யப்பன், சிவகிரி அமிர்தராஜ் உள்ளிட்ட 57 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடையம்-நாங்குநேரி

கடையம் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம், மூன்றடைப்பு ஜெயக்குமார், நாங்குநேரி முனீஷ், சின்னகோவிலான்குளம் முத்துகிருஷ்ணன், தேவர்குளம் தாமஸ், கடையநல்லூர் சண்முகநயினார், பாவூர்சத்திரம் விஜயகுமார், மூலைக்கரைப்பட்டி அந்தோணி ராஜ், தென்காசி வேல் பாண்டியன், சாம்பவர் வடகரை சஞ்சய் காந்தி, வள்ளியூர் செல்வன், சுரண்டை ராஜரத்னம், களக்காடு பார்த்தீபன், நாங்குநேரி அனைத்து மகளிர் பரவினா, சீதபற்பநல்லூர் உமா மகேசுவரி உள்ளிட்ட 58 பேர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 115 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பிறப்பித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 69 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதன்படி தூத்துக்குடி வடபாகம் ராஜாமணி குற்றாலத்துக்கும், ஞானராஜ் நாங்குநேரிக்கும், புதுக்கோட்டை சியாம்சுந்தர் புளியரைக்கும், மத்தியபாகம் ஊர்க்காவலபெருமாள் மூலைக்கரைபட்டிக்கும், காந்திமதி முன்னீர்பள்ளத்திற்கும், சுந்தரம் வி.கே.புதூருக்கும், தென்பாகம் ரவிக்குமார் முன்னீர்பள்ளத்துக்கும், சிப்காட் முத்துகணேஷ் சுரண்டைக்கும், முத்துமாலை ஊத்துமலைக்கும், ஆத்தூர் பச்சமால் சேரன்மாதேவிக்கும், நிலமோசடி தடுப்பு பிரிவு முருகன் பனவடலிசத்திரத்துக்கும், முறப்பநாடு சுரேஷ்குமார் விக்கிரமசிங்கபுரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் கோவில்பட்டி மேற்கு பாண்டியன் கல்லிடைக்குறிச்சிக்கும், ஏரல் சண்முகசுந்தரம் மானூருக்கும், திருச்செந்தூர் தாலுகா பழனி திருக்குறுங்குடிக்கும், குலசேகரன்பட்டினம் சுப்பிரமணியன் தேவர்குளத்துக்கும், புதுக்கோட்டை மகராஜா தென்காசிக்கும், விளாத்திகுளம் சங்கர் செங்கோட்டைக்கும், தருவைகுளம் ராஜேசுவரி தாழையூத்துக்கும், தாளமுத்துநகர் சங்கர் ஆய்க்குடிக்கும், சந்திரமூர்த்தி வாசுதேவநல்லூருக்கும், முறப்பநாடு பாலகிருஷ்ணன் சுத்தமல்லிக்கும், தெர்மல்நகர் ராமச்சந்திரன் களக்காட்டுக்கும், வடபாகம் திருமலைமுருகன் மாஞ்சோலைக்கும், தட்டப்பாறை முத்துராஜா சொக்கம்பட்டிக்கும், கோவில்பட்டி கிழக்கு முருகையா சேர்ந்தமரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 69 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story