திண்டுக்கல்லில் டிரீம் நகைக்கடை திறப்பு விழா
திண்டுக்கல்லில் டிரீம் நகைக்கடை திறப்பு விழா நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நேருஜிநகரில் ஆர்.எம்.காலனி சாலையில் டிரீம் ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடை நிறுவப்பட்டது. இந்த நகைக்கடையின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் துரை ரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நகைக்கடையை திறந்து வைத்தார்.
மேலும் அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், தொழில் அதிபர் கண்மணி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். திண்டுக்கல் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க துணைத்தலைவர் திண்ணப்பன் செட்டியார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பி.ஆர்.என்.பி. மெட்ரிக் பள்ளி இயக்குனர் சந்திரமோகன் வெள்ளி நகை விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நகைக்கடை சேர்மன் சரவணன், துணை சேர்மன் கதிரேசன், நிர்வாகி மோகன், இயக்குனர்கள் கணேசன், மாரிமுத்து, கருணாநிதி, கண்ணன், சுப்பையாஜி, மோகன், ரெங்கன், பவானிசெந்தில்குமார், பாலமுருகன், பீட்டர்லாரன்ஸ், சரவணன், புவனேஸ்வரி, ஜோசப், சூர்யா, மாரியப்பன், காருண்யா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story