கர்நாடக விவசாயிகளை காங்கிரஸ் அழித்துவிட்டது ராய்ச்சூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குற்றச்சாட்டு
கர்நாடக விவசாயிகளை காங்கிரஸ் அழித்துவிட்டது என்று ராய்ச்சூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
ராய்ச்சூர்,
கர்நாடக விவசாயிகளை காங்கிரஸ் அழித்துவிட்டது என்று ராய்ச்சூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
விவசாய கடன்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று கர்நாடகத்திற்கு வந்தார். ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால் வெறும் ரூ.1,100 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இங்கு ரூ.41 ஆயிரம் கோடி விவசாய கடன் உள்ளது.
காங்கிரஸ் அழித்துவிட்டது
கர்நாடக விவசாயிகளை காங்கிரஸ் கட்சி அழித்துவிட்டது. குமாரசாமி, நான் மக்களின் ஆதரவால் முதல்-மந்திரி பதவிக்கு வரவில்லை, சோனியா காந்தி ஆதரவில் அந்த பதவிக்கு வந்துள்ளேன் என்று சொன்னார்.
காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி காரணமாக ஒரு உதவியாளர் போல் பணியாற்றுவதாக குமாரசாமி சொல்கிறார். அவரால் எப்படி நல்லாட்சியை தர முடியும். மோடி மீண்டும் பிரதமராக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆதரியுங்கள்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
21-ந் தேதி வருகிறார்
இந்த கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமித்ஷா மீண்டும் வருகிற 21-ந் தேதி கர்நாடகம் வருகிறார். சிக்பள்ளாப்பூரில் நடை பெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
Related Tags :
Next Story