பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி போட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்


பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி போட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்
x
தினத்தந்தி 15 Feb 2019 5:00 AM IST (Updated: 15 Feb 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி விளையாட்டு போட்டி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார்.

மும்பை, 

பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி விளையாட்டு போட்டி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார்.

மெகா கூட்டணி

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக பிராந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் மாண்ட்வி மாவட்டங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தரம்பூர் பகுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

வளர்ச்சியை பாதிக்கும்

கிட்டத்தட்ட 20 முதல் 25 கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அவர்களால் தங்கள் கட்சி சார்பில் 10 பேரை கூட நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகின்றனர்.

இசை நாற்காலி விளையாட்டில் இசை நிற்கும்போது நாற்காலியை கைப்பற்றும் நபர் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். இங்கு 25 கட்சிகள் சேர்ந்து பிரதமர் இருக்கைக்காக இசை நாற்காலி விளையாட்டு போட்டியை நடத்துகின்றன. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் செயலாகும்.

பொய் பிரசாரம்

2020-ல் இருந்து 2035-ம் ஆண்டுவரை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். இந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தால் வறுமையில் இருந்து வெளியேறி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பிரதமர் நரேந்திர மோடியின் 55 மாத ஆட்சியின் வளர்ச்சியுடன், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்றார்.

Next Story