தேசியவாத காங்கிரசில் ஒருமித்த கருத்து நிலவுகிறது ராஜ்தாக்கரேயை கூட்டணியில் சேர்ப்பது பற்றி காங்கிரசிடம் பேசுவோம் அஜித்பவார் பேட்டி

தேசியவாத காங்கிரசில் ஒருமித்த கருத்து நிலவுகிறது ராஜ்தாக்கரேயை கூட்டணியில் சேர்ப்பது பற்றி காங்கிரசிடம் பேசுவோம் அஜித்பவார் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் தேசியவாத காங்கிரசில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும், இதுகுறித்து காங்கிரசிடம் விரைவில் பேசுவோம் என்றும் அஜித் பவார் கூறினார்.

மும்பை, 

நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் தேசியவாத காங்கிரசில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும், இதுகுறித்து காங்கிரசிடம் விரைவில் பேசுவோம் என்றும் அஜித் பவார் கூறினார்.

கூட்டணி முயற்சி

நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ்,தேசியவாதகாங்கிரஸ்கட்சிகள் கூட்டணியாக எதிர்கொள்ள உள்ளன. மேலும்ஓட்டுகள்சிதறுவதை தடுக்கசிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்காங்கிரசுடன் கொள்கை அடிப்படையில் வேறுபட்டராஜ்தாக்கரே தலைமையிலானநவநிர்மாண்சேனாகட்சியை கூட்டணியில்சேர்க்கதேசியவாதகாங்கிரஸ்முயன்று வருகிறது. இது தொடர்பாக ராஜ்தாக்கரேயை, தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார்.

ஒருமித்த கருத்து

இந்த நிலையில், நேற்று அஜித் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்து பேசினேன். பேச்சுவார்த்தை குறித்து இன்றைய தினம் (நேற்று) எங்களது கட்சியினரிடம் எடுத்துரைத்தேன். காங்கிரஸ் கட்சியிடம் விரைவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் எங்கள் கட்சியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story