போலி வாகன இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி பணமோசடி 3 பேர் கைது
மும்பையில் போலி வாகன இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் போலி வாகன இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி இன்சூரன்ஸ் நிறுவனம்
மும்பை லோயர் பரேலில் ‘ஒன் பாயிண்ட் சொலுசன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்' என்ற வாகன இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. குறைந்த கட்டணத்தில் இருசக்கர வாகன இன்சூரன்ஸ் செய்வதாக, விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் பலரும் இருசக்கர வாகனங்களுக்கு இன் சூரன்ஸ் எடுத்து பணம் செலுத்தினர்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவருக்கு அது போலி இன்சூரன்ஸ் நிறுவனம் என்பது தெரியவந்தது. உடனே அவர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
இதில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்தபடி பிரசாந்த் சுடார் (வயது25), இன்னாயத் போட்ரகெர் (39) ஆகிய 2 பேர் கஜனான் பாட்டீல் (28) என்பவரை மேற்பார்வையாளராக வைத்து அந்த போலி இன்சூரன்ஸ் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்த னர்.
மேலும் பரேலில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, 800 பேருக்கு போலியாக இன்சூரன்ஸ் செய்து கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த 306 போலி இன்சூரன்ஸ் ஆவணங்களை கைப்பற்றினர். கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story