ஆதார் அட்டை பெறுவதற்காக மாணவனுக்கு மந்திரி பெயரில் போலி பரிந்துரை கடிதம் 2 பேர் கைது

ஆதார் அட்டை பெறுவதற்காக மாணவனுக்கு மந்திரி பெயரில் போலி பரிந்துரை கடிதம் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஆதார் அட்டை பெற மாணவனுக்கு மந்திரி பெயரில் போலி பரிந்துரை கடிதம் வழங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத்,

ஆதார் அட்டை பெற மாணவனுக்கு மந்திரி பெயரில் போலி பரிந்துரை கடிதம் வழங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மந்திரி பெயரில் கடிதம்

தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆதார் அட்டை எடுப்பதற்காக அசோக் காத்தே (வயது30), அனில் சின்ட்கர் ஆகிய 2 பேரின் உதவியை நாடினான். இதற்கு உதவி செய்வதாக கூறிய அவர்கள் மாணவனிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வாங்கினர்.

பின்னர் ஆதார் அட்டை உடனடியாக எடுத்து கொடுப்பதற்காக அவர்கள் மந்திரி ரவிந்திர சவான் வழங்கியது போல் போலி பரிந்துரை கடிதம் ஒன்றை தயாரித்து மாணவனிடம் கொடுத்து உள்ளனர்.

2 பேர் கைது

இந்த நிலையில், அந்த கடிதம் போலி என்பது தெரியவந்ததை அடுத்து மாணவன் இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தான். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரி பெயரில் போலி பரிந்துரை கடிதம் தயார் செய்து கொடுத்த 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இது தொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story