கரியாப்பட்டினத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


கரியாப்பட்டினத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரியக்க ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து தலைமை தாங்கினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விரைவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என போராட்ட குழுவினர் தொவித்தனர்.

Next Story