நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 10 பவுன் நகைகள் பறிமுதல்
நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளரின் வீட்டில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 7-ந் தேதி கணேசன் பால் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்த சென்றிருந்தார். அவரது மனைவி மல்லிகா ரேஷன் கடைக்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தாரமங்கலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் ரமேஷ் (25) என்பவர் கணேசனின் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ரமேஷை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டுக்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது தாரமங்கலம், நாமக்கல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story