மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி திருநாவுக்கரசர் பேட்டி


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2019 3:00 AM IST (Updated: 16 Feb 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று, பேராவூரணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

பேராவூணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசு அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அவர்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.- காங் கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தி யில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story