நியூசிலாந்தின் மிகப்பெரிய பனிமலை உடைந்தது


நியூசிலாந்தின் மிகப்பெரிய பனிமலை உடைந்தது
x
தினத்தந்தி 16 Feb 2019 4:32 PM IST (Updated: 16 Feb 2019 4:32 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து நாட்டின் மிகப் பெரிய பனி மலையான ‘டாஸ்மன் கிளேசியரில்’ பிரமாண்ட பனிப் பாளங்கள் உடைந்துள்ளன.

நியூசிலாந்து பனி மலையின் பனி உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது.

பனி விரைவாக உருகித் தேங்குகின்ற நீரால், 1970-ம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இது நடைபெறுவதாக கருதப்பட்டது.

தற்போது அங்கு மிகப் பெரிய பனிப் பாளங்கள் உடைந்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த பனிப்பாளங்கள் வானைத் தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக அப்பகுதி வழிகாட்டி ஒருவர் கூறினார்.

தற்போது அதனால், பிரமாண்ட பனிப் பாளங்கள் அந்த ஏரியில் மிதக்கின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மனில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

உலகெங்கும் உருகும், உடையும் பனிப் பாறைகள் கவலை தருகின்றன.

Next Story