மேக் - அப் பிரஷ் சுத்தம்...


மேக் - அப் பிரஷ் சுத்தம்...
x
தினத்தந்தி 17 Feb 2019 3:00 PM IST (Updated: 16 Feb 2019 4:48 PM IST)
t-max-icont-min-icon

‘மேக் - அப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’கள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். அவை சுத்தமாக இல்லை என்றால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக் - அப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.

பிரஷ்களை சுத்தமாக பராமரிக்கும் வழிமுறை:

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் பிரஷை முக்கி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதன் நுனிப்பகுதியை கைவிரல்களால் தேய்க்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மென்மையான சோப் அல்லது பேபி ஷாம்புவை பயன்படுத்தி பிரஷை சுத்தம் செய்வது அவசியம்.

பிரஷில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை டவல் பயன்படுத்தி துடைத்தெடுக்க வேண்டும். அதில் படிந்திருக்கும் நீர்த்தன்மை நீங்கும் வரை உலர்த்த வேண்டும். ஒருபோதும் பிரஷை முறுக்கவோ, பிழியவோ கூடாது. அதன் மென்மைத்தன்மை பாழாகிவிடும்.

பிரஷ்களை போலவே மேக் - அப்புக்கு பயன்படுத்தும் ‘ஸ்பான்ஞ்’களையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். முதலில் அதனை வெதுவெதுப்பான நீரில் முக்கி வைக்க வேண்டும். பின்னர் அதையும் மென்மையான சோப் அல்லது சில துளி ஷாம்பு கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். நன்றாக கழுவிய பின்பு உலர வைக்க வேண்டும்.

கூந்தலுக்கு பயன்படுத்தும் சீப்புகளையும் அடிக்கடி இதேபோல் சுத்தப்படுத்த வேண்டும். உபயோகப்படுத்தாத பல் துலக்கும் பிரஷில் ஷாம்பை தடவி சீப்பின் உள் பகுதியில் அழுத்தி தேய்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வினிகரையும் பயன்படுத்தலாம். பின்னர் தண்ணீரில் கழுவி உலர்த்த வேண்டும். கூந்தலுக்கு பயன்படுத்தும் பிரஷையும் சுத்தப்படுத்துவது அவசியம்.

Next Story