குமரியில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீரென மாற்றப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதல்கட்டமாக குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த 63 சப்–இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
குமரி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாரத்சீனிவாஸ், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சாம் வேதமாணிக்கம் ஆகிய 5 பேர் மதுரை மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குலசேகரம் இன்ஸ்பெக்டர் தங்கம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்துக்கும், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்துக்கும், குமரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவுக்கும், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவுக்கும், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 14 பேர் குமரி மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் அருமனை போலீஸ் நிலையத்துக்கும், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கும், நெல்லை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிலோமினா குமரி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் குலசேகரத்துக்கும், நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், நித்திரவிளை போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து, கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் இரணியல் போலீஸ் நிலையத்துக்கும், கோவில்பட்டி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகதேவி ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மீனா ராஜாக்கமங்கலத்துக்கும், திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் செல்வி கீரிப்பாறை போலீஸ் நிலையத்துக்கும், பாளையங்கோட்டை சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராமையா, சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கும், திருநெல்வேலி மாநகர டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்கனி, குளச்சல் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்டமாக 3 ஆண்டுகளுக்கு மேல் குமரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மாற்றப்பட உள்ளனர். அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story