நகராட்சி சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் தொழில் வணிக கழகம் வலியுறுத்தல்


நகராட்சி சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் தொழில் வணிக கழகம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2019 3:30 AM IST (Updated: 17 Feb 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி சொத்துவரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று தொழில் வணிக கழகம் வலியுறுத்தி உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடியில் தொழில் வணிக கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் சாமி திராவிடமணி தலைமையில் நடந்தது. இதில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புறங்களின் நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் சொத்துவரி உயர்வு அறிவிப்பை நிறுத்த வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் பொருளாளர் அழகப்பன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் ராகவன், காசிவிஸ்வநாதன், பெரியதம்பி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ளாட்சித் துறை நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் 2018–19 ஆண்டிற்கான சொத்து வரியை வீடுகளுக்கு 50 சதவீதமும், வர்த்தக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் அதிரடியாக உயர்த்தியதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

மேலும் நிலுவைத்தொகை கட்ட வேண்டும் என்று அனுப்பப்பட்ட நோட்டீசும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் அளவிற்கு உள்ளது. எனவே இவற்றை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இதுகுறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.


Next Story