தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரண மானவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தேனியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேனி,
தேனி அருகே வடபுதுப் பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தவில்லை. இக்கூட்டத் தில் பேசிய பெண்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம், பட்டா, பஸ் வசதி போன்ற கோரிக்கைகளை தெரிவித் தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சரவை கூடி முடிவு எடுக்க தேவை யில்லை. உள்ளாட்சி அமைப்பு களில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்றால் இந்த கோரிக்கைகளை செய்து கொடுத்து இருக்கலாம். மேலும், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஆண்டாக எம்.எல்.ஏ.வும் இல்லை.
கூடிய விரைவில் மக்களின் அன்போடும், ஆசியோடும் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வரும். வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். தமிழகம் முழுவதுமே முதி யோர் உதவித்தொகை வழங்கு வதில் பிரச்சினை உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதியவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கு வோம்.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்போவதாக மோடி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நம்மிடம் இருந்து பணத்தை வரியாக எடுத்துக் கொண்டு, அதையே தற்போது தேர்தலுக் காக திருப்பிக் கொடுக்க உள்ளனர். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் திடீரென சட்டமன்றத்தில் பொங்கல் பரிசு ரூ.1,000 என்று அறிவித்தார். இப்போது ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
ஜெயலலிதா இருந்தபோது முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். வேலை வாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த முதலீட் டாளர்கள் மாநாட்டில் ரூ.3½ லட்சம் கோடிக்கு முதலீடு வந்துள்ளது என்று தெரிவித் துள்ளனர். இது எல்லாம் மக்களை ஏமாற்ற நடத்தப்படும் நாடகம்.
கோடநாட்டில் ஜெயலலிதா தங்கிய பங்களாவின் காவலாளி கொலை செய்யப் பட்டார். அந்த கொலை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மேலும் 4 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் ஊழல் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா. ஆனால், கொலை வழக்கில் சிறைக்கு போகப் போற முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருப்பார்.
அரசியலை பொறுத்தவரை ஜெயலலிதா நமக்கு எதிரி தான். ஆனால், அவர் முதல்- அமைச்சராக இருந்த போது உயிர் இழந்துள்ளார். அவ ருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறுகிறார்கள். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதனால் தானே விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் பதவி கிடைக்கும் வரை ஜெயலலிதா சாவில் மர்மம் என்று கூறினார். பதவி கிடைத்தவுடன் அதுபற்றி பேசுவது இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சாவுக்கு காரணமானவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கப்படும். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி தான் நடக் கிறது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அதில் நமக்கு சாதகமான தீர்ப்பாக வரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெரிய குளம் அருகே லட்சுமி புரத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு மு.க. ஸ்டாலின் பேசும்போது, ‘தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவில் மட்டுமில்லை, உலகத்திலேயே எந்தக்கட்சிக் கும் இல்லாத கட்டமைப்பு என்பது தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் காலி யாக உள்ள தொகுதி களுக்கு இடைத்தேர்தலை விட, ஒட்டுமொத்த தமிழகத் துக்கும் பொதுத் தேர்தல் வராதா? என்று மக்கள் எதிர்பார்க் கின்றனர். இன்றைக்கு இருக் கும் ஆட்சி அடியோடு அப் புறப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.
பின்னர், ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு அன்னை இந்திரா நகரில் நடந்த ஊராட்சி சபை கூட்டம் மற்றும் ஆண்டிப்பட்டியில் நடந்த வாக்குச்சாவடி முகவர் கள் ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், போடி ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, தாமரைக்குளம் பேரூர் தி.மு.க. பிரமுகர் எஸ்.வி. மகேந்திர வர்மன் மற்றும் தி.மு.க. நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story