கொடைக்கானலில் குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் 2 அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகருக்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அணை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மனோரஞ்சிதம் அணையின் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக 2 அணைகளும் நிரம்பி வழிந்தன. இதனிடையே கடந்த 3 மாதங்களாக மழை இல்லாததின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி பழைய அணையின் நீர்மட்டம் சுமார் 17 அடியாகவும் (மொத்த உயரம் 21 அடி), மனோரஞ்சிதம் அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் (மொத்த உயரம் 36 அடி) உள்ளது. நகர் பகுதிக்கு தினசரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘தற்போது வரை தண்ணீரை 5 நாட்களுக்கு ஒரு முறை நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து 3 மாதங் களாக மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடைகாலத்தில் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’ என்றார்.
Related Tags :
Next Story