புவனகிரி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


புவனகிரி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 17 Feb 2019 3:30 AM IST (Updated: 17 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள காந்திநகரில் கன்னிமார் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஆதிதிராவிட மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் இக்கோவிலை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், நேற்று முன்தினம் கடலூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக காந்திநகர் பொதுமக்கள், நேற்று புவனகிரி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி அறிந்ததும் தாசில்தார் ஹேமாஆனந்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், இடித்த இடத்திலேயே புதிய கோவில் கட்டித்தர வேண்டும். மாசிமகத்தையொட்டி நாளைமறுநாள்(செவ்வாய்க்கிழமை) கோவில் இருந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு தாசில்தார் ஹேமாஆனந்தி, இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்ற பொதுமக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலைந்து சென்றனர். 

Next Story