பள்ளிபாளையம் அருகே வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் உண்ணாவிரதம்


பள்ளிபாளையம் அருகே வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:14 AM IST (Updated: 17 Feb 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியில் விவசாய விளை நிலங்களுக்கு மத்தியில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் கடந்த 12-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று 5-வது நாளாக இவர்களது போராட்டம் தொடர்ந்தது. இதையொட்டி நேற்று உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. இதில் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததாக கூறி செல்லமுத்து, அருள், பிரபு, மோகன், மல்லிகா, பெருமாயி ஆகிய 6 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் மேலும் சில விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.

இதுகுறித்து பெருமாள் கூறும்போது, “சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் உண்ணாவிரதம் இருந்தோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம்” என்று தெரிவித்தார்.

Next Story