காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான மராட்டிய வீரர்கள் 2 பேரின் உடல் சொந்த ஊரில் தகனம் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான மராட்டிய வீரர்கள் 2 பேரின் உடல் சொந்த ஊரில் தகனம் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 17 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான மராட்டிய வீரர்கள் 2 பேரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மும்பை,

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான மராட்டிய வீரர்கள் 2 பேரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சொந்த ஊர் வந்தது

காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் நிதின் ரத்தோடு (வயது36), சஞ்சய் ராஜ்புத் (47) ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் உடல் விமானம் மூலம் நேற்று மதியம் 12.30 மணியளவில் அவுரங்காபாத் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இதில் புல்தானாவில் உள்ள லேனார் தாலுகா சோர்பங்கரா கிராமத்தை சேர்ந்த நிதின் ரத்தோடின் உடல் அலங்கரிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வேனில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேபோல சஞ்சய் ராஜ்புத்தின் உடல் ஹெலிகாப்டரில் அவரது சொந்த ஊரான மல்காப்பூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடல் தகனம்

அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவ வீரர்களின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதுதவிர மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவர்களது உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Next Story