பென்னாகரம் அருகே எம்.பி.ஏ. பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


பென்னாகரம் அருகே எம்.பி.ஏ. பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Feb 2019 4:35 AM IST (Updated: 17 Feb 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே எம்.பி.ஏ. பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எர்ரகொல்லனூரை சேர்ந்தவர் ஜெய் நரசிம்மராஜ் (வயது 37). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இளமதி என்ற மனைவியும், கோபிகா என்ற மகளும், சபரி என்ற மகனும் உள்ளனர். ஜெய் நரசிம்மராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக இளமதி தனது குழந்தைகளுடன் பருவதனஅள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஜெய் நரசிம்மராஜ் வீட்டில் தனியாக இருந்தார். இதனிடையே நேற்று காலை முதல் அவருடைய வீட்டில் லைட் எரிந்து கொண்டே இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெய் நரசிம்மராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய் நரசிம்மராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Next Story