அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது பரிதாபம்


அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அம்பர்நாத்,

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தவறி விழுந்தான்

தானே மாவட்டம், உல்லாஸ்நகர் ஷயாத்ரி நகரை சேர்ந்தவன் சிறுவன் சோட்டு பிரஜாபதி (வயது15). இவன் வீட்டருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை 8.15 மணியளவில் சிறுவன் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. மாணவன் அந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க, சைக்கிளை நிறுத்த முயன்றான். இதில் நிலைதடுமாறி மாணவன் கீழே விழுந்தான்.

பஸ் ஏறியது

அப்போது பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த அரசு பஸ் ஒன்று, மாணவன் மீது ஏறியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் விபுல் வாஜடேயை கைது செய்தனர்.

Next Story