வேலூர் சரகத்துக்கு உட்பட்ட 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு


வேலூர் சரகத்துக்கு உட்பட்ட 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:49 AM IST (Updated: 17 Feb 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. வனிதா உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரசுத்துறைகளில் ஒரே பணியிடத்தில் நீண்ட நாட்கள் பணிபுரிந்து வருபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரியும் 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மாவட்டம் தாளம்பூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சோளிங்கர் சரகத்துக்கும், விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ராணிப்பேட்டை சரகத்துக்கும், மாமல்லபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி திருப்பத்தூர் டவுனுக்கும், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஊத்துக்கோட்டை சரக இன்ஸ்பெக்டர் பாலு ஆற்காடு தாலுகா சரகத்துக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆம்பூர் டவுனுக்கும், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு சரக இன்ஸ்பெக்டர் ராஜா திருப்பத்தூர் தாலுகாவிற்கும், திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு குழுவிற்கும், தெள்ளார் இன்ஸ்பெக்டர் அழகுராணி வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு குழுவிற்கும், குடியாத்தம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் லதா வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வாணியம்பாடி சரக இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், தேசூர் சரக இன்ஸ்பெக்டர் முரளிதரன் வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவுக்கும், வேலூர் மாவட்ட சிறப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் நிலவழகன், வேலூர் போலீஸ் சேவை பயிற்சி மையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பி.அமுதா திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.அமுதா வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஆரணி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பாபு அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வந்தவாசி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புனிதா வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், செங்கம் சரக இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கீழ்கொடுங்கலூர் இன்ஸ்பெக்டர் குமாரி பேரணாம்பட்டு சரகத்துக்கும், ஆலங்காயம் சரக இன்ஸ்பெக்டர் திருமால் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்யாறு சரக இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் ஆலங்காயம் சரகத்துக்கும், கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் கவிதா குடியாத்தம் தாலுகாவிற்கும், திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாணியம்பாடி டவுனுக்கும், காஞ்சீபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கீழ்கொடுங்காலூருக்கும், விழுப்புரம் மாவட்டம் வானூர் இன்ஸ்பெக்டர் எழிலரசி செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வளவனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி ஆரணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதா வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு குழும இன்ஸ்பெக்டர் அபர்ணா செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வேட்டவலத்துக்கும், ஆம்பூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மலர் கடலாடிக்கும், வாணியம்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கலசப்பாக்கம் சரகத்துக்கும், சோளிங்கர் சரக இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பெரணமல்லூருக்கும், வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தேசூர் சரகத்துக்கும், ராணிப்பேட்டை சரக இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவண்ணாமலை டவுனுக்கும், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தெள்ளாறுக்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தி கீழ்பென்னாத்தூருக்கும், வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பலதா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், குடியாத்தம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அன்பரசி திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவிற்கும், பேரணாம்பட்டு சரக இன்ஸ்பெக்டர் அப்பாசாமி செய்யாறு சரகத்துக்கும், செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு குழுவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி.வனிதா வெளியிட்டுள்ள உத்தரவில் “வேலூர் சரகத்தில் 46 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக அந்தந்த பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


Next Story