கூந்தலின் முடியில் ஆவி பிடியுங்கள்...


கூந்தலின் முடியில் ஆவி பிடியுங்கள்...
x
தினத்தந்தி 17 Feb 2019 3:09 PM IST (Updated: 17 Feb 2019 3:09 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி, முடிந்து வைக்கவேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ற ‘ஸ்கார்ப்’ அல்லது தொப்பியை அணிந்து செல்வது கூந்தலின் பாதுகாப்பிற்கு ஏற்றது.

பெண்கள் இப்போது ஏற்றுமதி நிறுவனங்களிலும், துகள்கள் நிறைந்த பகுதிகளிலும் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் பணி இடங்களுக்கு செல்லும்போது ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் ஆயில் போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கட்டாயம் பயன் படுத்தவேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மேற்கண்டவைகளை அதிகம் பயன் படுத்தினால் கூந்தலில் அழுக்கு, துகள்கள் போன்றவை அதிகம் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.

அடிக்கடி வெயிலில் செல்லும் பெண்கள் கூந்தலில் ஹேர் சன்ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன் படுத்துவது பலனளிக்கும்.

முடி நனைந்திருந்தாலும், அதிக எண்ணெய்தன்மையுடன் இருந்தாலும் அழுக்கு பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை பெண்கள் எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.

சுற்றுப்புற சூழல் மாசுவால் முடி உலர்ந்துபோகும். அந்த வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.

Next Story