கண்களுக்கு கவனம் கொடுங்கள்..
பெண்களின் அழகை அவர்களது கண்கள் அர்த்தமுள்ளதாக்குகிறது. அதனால் கண்கள் மீது எப்போதும் அதிக கவனம் செலுத்தவேண்டும். வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
அது அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவதாக இருக்கவேண்டும். சூரிய கதிர்களின் தாக்கத்தில் இருந்தும், சுற்றுப்புற மாசுவில் இருந்தும் கண்களை அவை பாதுகாக்கும்.
கண்களுக்குள் தூசு, துகள்கள் விழுவது தவிர்க்க முடியாதது. அப்படி ஏதாவது விழுந்துவிட்டால் உறுத்தலும், வலியும் தோன்றும். உடனே குளிர்ந்த நீரில் பஞ்சு அல்லது காட்டன் துணியை முக்கி, மூடிய கண் களின் மேல் வையுங்கள். பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்களில் மணல் விழுந்தது போன்ற உறுத்தலோ, சொறி உணர்வோ தோன்றினாலும், கண்கள் சிவந்து போயிருந்தாலும், அது மூன்று நாட் களுக்கு மேல் நீடித்தால், கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
வெளியே போய்விட்டு வீடு திரும்பியதும் கண்களை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முகம் கழுவும்போது கண்களை கழுவும் பழக்கம் பலரிடமும் இல்லை. கண்களை கழுவுவது மிக அவசியம்.
இளநீரால் கண்களையும், முகத்தையும் கழுவுவது நல்லது. கண்களின் பொலிவுக்கும், முகத்தின் அழகுக்கும் அது உதவும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை கப் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பருகினால் சருமத்தின் பொலிவுக்கும், கண்களின் அழகுக்கும் அது உதவும்.
கேரட் மற்றும் கீரை கலந்த ஜூஸ் பருகுவது கண்களின் அழகுக்கும், கண்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
Related Tags :
Next Story