ஜி.பி.எஸ். கருவி உதவியால் சிக்கினர் மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் கைது
ஜி.பி.எஸ். கருவி உதவியால் மோட்டார் சைக்கிள் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது வீட்டின் முன்பு புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று முன்தினம் அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போய்விட்டது.
இதுதொடர்பாக புஷ்பராஜ் தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் திருட்டு போன தனது மோட்டார் சைக்கிளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் உதவியால் மோட்டார் சைக்கிளை மீட்டு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஜி.பி.எஸ். கருவி உதவியோடு புஷ்பராஜின் மோட்டார் சைக்கிளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணித்தபோது மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் அடையாறு, திருவான்மியூர் வழியாக பழைய மாமல்லபுரம் சாலையில் செல்வது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஜி.பி.எஸ். கருவி மூலம் மோட்டார் சைக்கிள் செல்லும் பாதையில் பின் தொடர்ந்தனர். இறுதியாக சென்னையை அடுத்த கூவத்தூர் பகுதியில் வைத்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கினார்கள். அதை திருடிச்சென்ற புளியந்தோப்பை சேர்ந்த வினோத், சூர்யா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும்போது வழிநெடுக 4 பேரிடம் செல்போன்களையும், ஒரு பெண்ணிடம் கைப்பையையும் பறித்துள்ளனர். அவற்றையும் போலீசார் மீட்டனர்.

Related Tags :
Next Story