புளியந்தோப்பு பகுதியில் 755 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்


புளியந்தோப்பு பகுதியில் 755 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் சார்பில், 755 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, பெரம்பூர், செம்பியம், கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் ஆகிய முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளிலும் என 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் சார்பில், 755 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மையத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண்காணிப்பு கேமராக் களை பொருத்த பாடுபட்ட போலீசாரை பாராட்டினார்.

இதில் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் அஜ்மல்ஓடா, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜார்ஜ் ஜார்ஜ், புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சீனிவாசன், சுகுமார், சந்திரசேகர், கார்த்திக் மற்றும் போக்கு வரத்து போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story