மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பொன்நகரை சேர்ந்தவர் முரளி (வயது 46). இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி (40) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று பொன்னேரியில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேட்டுக்கு முரளி மோட்டார் சைக்கிளில் சென்றார். கவரைப்பேட்டை சத்யவேடு சாலையில் சூரவாரிக்கண்டிகை என்ற கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே சத்யவேட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி வந்த டிரைலர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மதுராந்தகத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு 45 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story