காஷ்மீர் தாக்குதலில் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி


காஷ்மீர் தாக்குதலில் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 18 Feb 2019 3:15 AM IST (Updated: 18 Feb 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் தாக்குதலில் உயிர் இழந்த ராணுவவீரர்களுக்கு உடன்குடி-ஆறுமுகநேரியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ஆறுமுகநேரி, 

காஷ்மீர் தாக்குதலில் உயிர் இழந்த ராணுவவீரர்களுக்கு உடன்குடி-ஆறுமுகநேரியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

உடன்குடி

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு உடன்குடி பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றிய பா.ஜனதா தலைவர் திருநாகரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் லங்காபதி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிவந்திவேல், அழகேசன், ஒன்றிய வர்த்தகப் பிரிவு தலைவர் நாராயணன், மாவட்ட சார்பு அணித் தலைவர்கள் பரமசிவன், முத்துராஜன் தர்மலிங்கம், விஜயசங்கர், ஒன்றிய துணைத்தலைவர் சங்கரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஆறுமுகநேரி

அதே போல் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அனைத்து கட்சி சார்பில் துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர பா.ஜனதா தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய தலைவர் பற்குணபெருமாள், த.மா.கா.வை சோந்த மாநில செயற்குழு உறுப்பினர் தங்கமணி, ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் முருகேசன், ஆறுமுகநேரி தலைவர் முருகன், ம.தி.மு.க. நகர அவைத்தலைவர் சுடலையாண்டி, நகர செயலாளர் நாராயணன், சமத்துவ மக்கள் கட்சி நகர செயலாளர் சீமான், பா.ம.க. மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதே போல் ஆறுமுகநேரி புனித சவேரியர் ஆலயத்தில் நடந்த திருப்பலியில், பங்கு தந்தை ஸ்டார்லின் அடிகளார் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story