விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்


விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று 6-வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியில், விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று 6-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, மின் கோபுரம் அமைப்பதை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும், தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று தெரிவித்தனர்.

Next Story