“பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” சீமான் பேச்சு
“பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
“பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமை தாங்கினார். மண்டல தலைவர் வெற்றிசீலன் முன்னிலை வகித்தார்.
நெல்லை மண்டல மகளிர் பாசறை குயிலி நாச்சியார், மாநில இளைஞர் பாசறை இசை மதிவாணன், மாநில பேச்சாளர் வெற்றி சீலன் ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்தில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது;-
இலவசங்களை...
இந்திய நாட்டில் ஒரே நாளில் பணம் செல்லாது என்று அறிவித்தார்கள். அவர்களால் இந்திய நாட்டில் ஜாதி இல்லை என்று அறிவிக்க முடியுமா?. ஜாதி அவர்களுக்கு தேவைப்படுகிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்து உள்ளது. மாநில அரசு ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற இலவசங்களை நிறுத்த முடியுமா?. முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் இருக்காது. இலவசம் வாங்க வேண்டிய நிலை மக்களுக்கு இருக்காது. இடஒதுக்கீடு வேண்டும் உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம். பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது எங்கள் கொள்கை முடிவு. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், மாவட்ட தலைவர் ஆல்பர்ட் சாமுவேல், தூத்துக்குடி தொகுதி செயலாளர் பாக்கியராஜ், ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துகுமார், தூத்துக்குடி மண்டல இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ், மகளிர் பாசறை அன்னலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story