திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்துகொண்டு, “சவுரிராஜா சவுரிராஜா“ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையடிக்கு வந்தடைந்தது.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருக்கண்ணபுரத்தில் இருந்து பெருமாள் புறப்பட்டு திருப்பட்டினம் கடற்கரைக்கு சென்று அங்கு தங்க கருட வாகனத்தில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 24-ந் தேதி நடக்கிறது.

Related Tags :
Next Story