திருவண்ணாமலையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான வாகன உரிம சான்று கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான வாகன உரிம சான்று வழங்கும் திட்டத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான ஓட்டுனர் உரிமம் மற்றும் ‘ஸ்மார்ட் கார்டு’ வாகன உரிம சான்று (ஆர்.சி. புத்தகம்) வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான ஓட்டுனர் உரிமத்தில் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ளது போன்று ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்து உள்ள நபரின் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் இதுவரை காகித வடிவில் வழங்கப்பட்ட வாகன உரிம சான்றும், இனிமேல் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிம சான்று வழங்கும் திட்டத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்த நபர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ ஓட்டுனர் உரிமத்தை கலெக்டர் வழங்கினார். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, மணிபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story