இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வை 185 பேர் எழுதினர்


இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வை 185 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நடந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 பணிக்கான எழுத்து தேர்வை 185 பேர் எழுதினர். 115 பேர் தேர்வு எழுதவில்லை.

வேலூர், 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை-4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 300 பேர் விண்ணப்பித்திருந்த னர். அவர்களுக்கு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

இதையொட்டி தேர்வர்கள் காலை 9 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 185 பேர் தேர்வு எழுதினர். 115 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story