நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடிக்கு மாற்றம்
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம்
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி சொந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் பணியாற்றுபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 69 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடிக்கு மாறுதலாகி வந்து உள்ளனர்.
அதன்படி தென்காசி வேல்பாண்டியன், விக்கிரமசிங்கபுரம் வெங்கடேஷ், பாளையங்கோட்டை லட்சுமி ஆகியோர் தூத்துக்குடி வடபாகத்துக்கும், புளியரை தினேஷ்பாபு, கடையநல்லூர் ராதாபாய்ஜெயசித்ரா, நெல்லை நகரம் விஜய்கோல்டன் சிங் ஆகியோர் தூத்துக்குடி மத்தியபாகத்துக்கும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மகாலட்சுமி, சொக்கம்பட்டி நிஷாந்த், பத்தமடை ராமகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் சிவகுமார் ஆகியோர் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். வி.கே.புதூர் சத்தியவேந்தன் முத்தையாபுரத்துக்கும், அச்சன்புதூர் சுதாகரன் தெர்மல்நகருக்கும், வள்ளியூர் செல்வன், தேவர்குளம் தாமஸ் ஆகியோர் தாளமுத்துநகருக்கும் மாறுதலாகி வந்து உள்ளனர்.
தாழையூத்து இசக்கி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், மூலக்கரைப்பட்டி அந்தோணிராஜ், மூன்றடைப்பு ஜெயக்குமார் ஆகியோர் புதுக்கோட்டைக்கும், எஸ்.வி. கரை சஞ்சய் காந்தி தட்டப்பாறைக்கும், மானூர் சேகர் புதியம்புத்தூருக்கும், களக்காடு பார்த்திபன் சிப்காட்டுக்கும், சீதபற்பநல்லூர் உமாமகேசுவரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அனில்குமார் தூத்துக்குடி நில மோசடி தடுப்பு பிரிவுக்கும், நெல்லை மோப்பநாய் பிரிவு கருப்பசாமி, தூத்துக்குடி மோப்பநாய் பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்பட 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
சாயர்புரம்
இது தவிர தூத்துக்குடி மாவட்டத்துக்குள் 9 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, கோவில்பட்டி மேற்கு பாலகிருஷ்ணன் ஆகியோர் சிப்காட்டுக்கும், தட்டப்பாறை ரென்னிஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கும், ஓட்டப்பிடாரம் ஜெயமணி, நாரைக்கிணறு சுந்தர்ராஜ் ஆகியோர் விளாத்திகுளத்துக்கும், தட்டார்மடம் சிவசுப்பிரமணியன் மாசார்பட்டிக்கும், கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அங்காளேஸ்வரி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய அனிதா மத்தியபாகம் குற்றப்பிரிவுக்கும், எப்போதும்வென்றான் தர்மராஜ் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story