ஈரோட்டில் கோடை காலத்துக்கு முன்பே கொளுத்தும் வெயில்
கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
ஈரோடு,
குளிர்காலம் முடிந்து கோடை காலத்தின் வாயிலில் இருக்கும்போதே வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும் அளவுக்கு உயர்ந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து சராசரியாக வினாடிக்கு 300 முதல் 400 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு சுமார் 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் தண்ணீர் வேகவேகமாக குறையும். கோடை காலம் தொடங்க இன்னும் ஒரு மாதகாலம் இருக்கும் நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் கோடை காலம் எப்படி இருக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story