தேர்வு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு


தேர்வு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 8:06 PM GMT)

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும் மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பகுதிகளில் கலெக்டர் வீரராகவராவ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு–4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேர்வு மையமான டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்பு அவர் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேடு–3, கிரேடு–4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, கிரேடு–3 தேர்வுக்கு 6 தேர்வு மையங்களும், கிரேடு–4 தேர்வுக்கு 7 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக 7 ஆய்வு அலுவலர்களும், 7 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் 2 நகர்வு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக கிரேடு–3 தேர்வுக்கு 1,599பேருக்கும், கிரேடு–4 தேர்வுக்கு 1,851 பேருக்கும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தேர்வறைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்கள் தேர்வறைகளுக்கு சிரமமின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை மீண்டும் அந்தந்த தேர்வு மையங்களில் உள்ளவாறு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் உடனிருந்தார்.


Next Story